ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் இன்று விஜயகாந்தின் உடல்நலம் முன்னேற்றம் அடைய வேண்டி, புரோகிதர் இல்லத்தில் 19 புரோகிதர்கள் பங்கேற்று தில ஹோமம் செய்தனர்.
சுமார் இரண்டரை மணி நேரம் வரை இந்த ஹோமம் நடைபெற்றது. பின்னர் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட குடும்பத்தினருடன் சென்று இருந்தனர்.
ஆனால், பொதுமக்கள் பெருமளவில் இருந்ததன் காரணமாக வாளியின் மூலமாக நீர் எடுத்து செல்லப்பட்டு காரில் வைத்து தீர்த்த நீராடிய பின் விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மேலும் இன்று இரவு விஜயகாந்த் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் பகுதியில் தங்கி இருக்க வாய்ப்புள்ளது என்று கட்சியினர் தகவல் தெரிவிக்கின்றனர்.