கரோனா தொற்றின் இரண்டாம் அலை வெகு வேகமாகப் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தடுப்பூசி போடுவதன் மூலம் மட்டும்தான் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும், உயிரிழப்பைத் தடுக்க முடியும் என அரசு அறிவித்துள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசி மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 376 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு முற்றிலும் தீர்ந்துபோன நிலையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் இன்று (ஜூன் 5) முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று நடக்கவில்லை.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடவருபவர்களுக்கு முன்பதிவு மட்டும் செய்யப்படுகிறது. தடுப்பூசி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றவுடன் தகவல் தெரிந்துவந்து ஊசி போட்டுக் கொள்ளுமாறு செவிலியர் கேட்டுக்கொண்டுள்ளனர்.