முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து மெயின் ரோடு அமைச்சர் யார், குட்கா புகழ் அமைச்சர் யார், தெர்மகோல் அமைச்சர் யார், பாமாயில் அமைச்சர் யார் என முதலமைச்சர் பழனிசாமி வரை கேள்வி எழுப்பினார்.
அமைச்சர்களின் பட்டப்பெயரைக் கூறி அவர் கிண்டலாக கேள்வி எழுப்பியதை, திமுக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், தியாகத்தலைவி சின்னம்மா அப்படி என்ன தியாகம் செய்தார் என்று கேட்ட உதயநிதி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியா சசிகலா சிறை சென்றார்?, கோடிகோடியாக ஊழல் செய்து சிறை சென்று வந்தவர்தான் சசிகலா என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: கமல் ஹாசன் வெளியூர்க்காரரா?