ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீழகொடுமலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மனைவி போதும்பொண்ணு(28). இவர், அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதை, ஆறுமுகம் பலமுறை கண்டித்தும் போதும்பொண்ணு கேட்கவில்லை. திரும்பக் கண்டிக்கவே, அதில் ஆத்திரமடைந்த போதும்பொண்ணு, 2018 ஜூலை 17ஆம் தேதி வேல்முருகனுடன் சேர்ந்து ஆறுமுகத்தை உயிரோடு எரித்துக்கொலை செய்தார்.
அதுதொடர்பாக ஆறுமுகத்தின் தாய் சண்முகவள்ளி அளித்தப் புகாரின் பேரில் முதுகுளத்தூர் காவல்துறையினர் வேல்முருகன், போதும்பொண்ணு இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. அதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சண்முகசுந்தரம், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் வெட்டிக் கொலை: பெண் கைது