ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் திங்கட்கிழமை இரவு கடலில் மீன்பிடித்தபோது, மீனவரின் வலையில் 12 அடி நீளமும், 30 கிலா எடையும் கொண்ட விலாங்கு மீன் ஒன்று சிக்கியிருந்தது. இந்த விலாங்கு மீன் நேற்று பாம்பன் மீன் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த மீன் மலைப பாம்பு போன்று நீளமாக இருந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் பின்வாங்கினர். பின்பு இது பாம்பு போன்ற நீளமான விலாங்கு மீன் வகையைச் சேர்ந்த கடல் மீன் என விற்பனையாளர்கள் தெரிவித்ததால், அதை ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
விலாங்கு மீன்கள் குறித்து மரைக்காயர் பட்டின மத்திய மீன் ஆராய்ச்சித்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ''ஆங்குயில் பார்ம்ஸ் என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட கடலிலும், நன்னீரிலும் வாழக்கூடிய விலாங்கு மீன்கள் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என கூறினர்.