ETV Bharat / state

எதிர்காலத்தில் இரு கட்சிகள் மட்டுமே இருக்கும் -ராஜகண்ணப்பன்

எதிர்காலத்தில் தேர்தல் வரும்போது திராவிட கழகம், திராவிடம் இல்லா கழகம் என இரு கட்சிகள் மட்டுமே இருக்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

new bus rout  transport minister inaugurate new bus  transport minister inaugurate new buses for new bus rout  transport minister  transport minister rajakannappan  ramanathapuram news  ramanathapuram latest news  ramanathapuram new bus rout  ராமநாதபுரம் செய்திகள்  ராஜகண்ணப்பன்  போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  போக்குவரத்துத் துறை  அமைச்சர் ராஜகண்ணப்பன்  போக்குவரத்துத் துறை அமைச்சர்  புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவையை துவங்கிவைத்தார் ராஜகண்ணப்பன்  புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவை  போக்குவரத்து சேவை
ராஜகண்ணப்பன்
author img

By

Published : Aug 22, 2021, 6:19 AM IST

ராமநாதபுரம்: பரமக்குடியில் 16 புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவையும், 1.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் புதிய கட்டடத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 125 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவை

இரு கட்சிகள் மட்டுமே

இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் திசை வீரன், முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர், “சமூக நல்லிணக்கத்துடன் திராவிட இயக்கம் தமிழ்நாட்டை ஆளுகின்ற திருப்தியில் மக்கள் உள்ளனர். எதிர்காலத்தில் தேர்தல் வரும்போது திராவிட கழகம், திராவிடம் இல்லா கழகம் என இரு கட்சிகள் மட்டுமே இருக்கும்.

தற்போது உள்ள கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து தேசிய கட்சி போட்டியிடும். அது மதவாத கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியும் தோற்றுவிடும்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம்: தலைமை வழக்கறிஞருக்கு கடிதம் எழுதிய திருமா எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.