ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசுப் பணியாளர்களுக்கு நேற்று (மார்ச்.15) பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக விவரம்
ராமநாதபுரம்- 2,603 பேர்
பரமக்குடி -1,703 பேர்
கமுதி - 1,444 பேர்
திருவாடனை - 2,155 பேர் என மொத்தம் ஏழாயிரத்து 905 அரசுப் பணியாளர்கள் பயிற்சி பெற்றனர்.
இதையும் படிங்க:’கமல் விரைவில் புரிந்து கொள்வார்’ ; வானதி சீனிவாசன்