சீனாவைச் சேர்ந்த ஜியாஞ்சுன் (48) என்பவர் இந்தியாவிற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி 21ஆம் தேதி கொல்கத்தா வந்திறங்கியுள்ளார். இதன்பின்பு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு ராமேஸ்வரத்திற்கு வந்தவர் ராமநாதசுவாமி கோயில் அருகிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
தனியார் விடுதி நிர்வாகிகள் சீனப் பயணி தங்கியிருப்பதை கோயில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சீனப் பயணியை சுகாதார அலுவலர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவரை தனி வாகனம் மூலம் மதுரை கொண்டு சென்றனர்.
அங்கிருந்து சென்னை விமான நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட ஜியாஞ்சுன்னை சீனாவிற்கு திருப்பி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரு வாரங்களுக்கு முன் சீன இளைஞர் ஒருவர் ராமேஸ்வரம் வந்து சுகாதாரத் துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டார்.
இதையும் படிங்க: ‘நீங்கள் வேறு மாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரி செயல்படுவேன்’ - எச்சரித்த ஆட்சியர்