கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இத்தேர்விற்கான முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மாநில அளவில் முதல் 100 இடங்களில் இடம் பெற்ற 35 பேர் கீழக்கரை, ராமநாதபுரம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பது டிஎன்பிஎஸ்பிக்கு தெரியவந்தது.
இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டிஎன்பிஸ்பி அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி அந்த 35 தேர்வர்களை வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்துள்ளது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சியின் செயலர் நந்தகுமார் தலைமையிலான அலுவலர்கள் இன்று ராமநாதபுரத்தையடுத்துள்ள முத்துப்பேட்டை பள்ளி கல்லூரி, கீழக்கரையில் உள்ள தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். மேலும், ராமநாதபுரம் மாவட்ட கருவூல அலுவலகத்தையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து நந்தகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது அந்தச் சம்பவம் குறித்து தெரிவிக்க இயலாது. விசாரணை முடிவடைந்த பின்பு அது குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை - டிஎன்பிஎஸ்சி செயலாளர் எச்சரிக்கை