ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில்...
- அவசர சிகிச்சைப் பிரிவு,
- சிறிய அறுவை சிகிச்சை அரங்கம்,
- ஆய்வகம்,
- நுண்கதிர் சிகிச்சைப் பிரிவு,
- சிடி ஸ்கேன் ரத்த சுத்திகரிப்புப் பிரிவு,
- 30 படுக்கைகள் கொண்ட வார்டுகள்
- லிப்ட் வசதி
ஆகியவை அடங்கிய உயர் சிகிச்சைகள் கூடுதல் கட்டடம் ஐந்து கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இக்கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதில் பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகர், பரமக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நாகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு 100 விழுக்காடு இழப்பீடு: முதலமைச்சருக்கு பரமக்குடி எம்எல்ஏ கடிதம்