ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அருகே முனைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி. இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அகதி ஒருவர் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளார், கூடவே மண்டபம் பகுதியைச் சேர்ந்த இரண்டு படகு ஓட்டிகளையும் கடலுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இவர்கள் மூன்று பேர் சென்ற நாட்டுப் படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.