தமிழ்நாட்டில் சென்னையை தவிர அனைத்து நகர் புறங்களிலும் சலூன் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்குட்பட்டு இந்தக் கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். நகர்ப்புறங்களில் திறக்கப்படும் சலூன் கடைகளில் தகுந்த இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினி பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, தூத்துக்குடி மாநகரில் 60 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் இன்று திறக்கப்பட்டன. தூத்துக்குடி, மில்லர்புரத்திலுள்ள சலூன் கடை ஒன்றில் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து சலூன் கடை உரிமையாளர் பொன்.மாரியப்பன் கூறுகையில், "கரோனா பரவலை தடுக்கும் விதமாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பிற்கும் தன்னுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டும் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்குகிறேன். சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்" என்றார்.
மேலும், புற ஊதா கதிர்கள் கொண்டு கருவிகளை சுத்தம் செய்து முடி திருத்தும் செய்வதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் ராமநாதபுரத்திலும் முடி திருத்தம் செய்யும் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்தினர்.
இதையும் படிங்க: பெங்களூருவில் முடிதிருத்தும் நிலையத்திற்கு இவ்வளவு கெடுபிடிகளா?