ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் இருந்து மீனவர்கள் பொன்னையா (44), மணிகண்டன் (30),மாரிச்செல்வம் (38),மணிகண்டன் (43), அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன்,பெங்களுரை சேர்ந்த 6 பேர் நேற்று மாலை 4 மணி அளவில் கடலை சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்.
அப்போது, பொன்னையா கடலில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து, உடன் இருந்தவர்கள் பொன்னையாவை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், திருவாடானை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர், விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்,கடலில் மாயமான பொன்னையாவை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று(ஜூன்.17) காலை பொன்னையா உடல் கரை ஒதுங்கியது. இதனையடுத்து அங்கு சென்ற தொண்டி காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தொண்டி காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உண்டியல் உடைத்து பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது