ETV Bharat / state

செய்தியாளர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் கொள்ளை - rameshwaram news in tamil

ராமேஸ்வரம் பாரதி நகரில் வசித்துவரும் செய்தியாளர் வீட்டில் பட்டப்பகலில் கதவை உடைத்து, 15 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

theft-from-journalist-house-in-rameshwaram
செய்தியாளர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் கொள்ளை
author img

By

Published : Sep 28, 2021, 9:52 AM IST

ராமநாதபுரம்: வீட்டின் உரிமையாளரும், தனியார் நிறுவனத்தின் செய்தியாளருமான லோகநாதன், தனது குடும்பத்தோடு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியூர் பயணம் சென்றுள்ளார். வீட்டில் அவரது பையன் மட்டும் இருந்துள்ளார். இன்று காலை அவரது பையன் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர்.

பின்னர், வீடு திரும்பிய அவர், பீரோ, அலமரி உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டின் பின் வாசல் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணத்தை திருடுபோனது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர் லோகநாதன் முன்னிலையில், காவலர்கள் அலமாரியை முழுவதும் சோதனை செய்ததில் 15 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி, ரூ. 60 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் பாரதி நகர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆயுதங்களைக் காட்டி பெட்ரோல் பங்கில் 1.70 லட்சம் ரூபாய் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.