ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் மிக முக்கிய பங்காற்றி வரும் பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் ரயில் செல்லும் போது, அதிக அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது சென்சார் கருவி மூலம் கண்டறியப்பட்டதும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
மொத்தமாக பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 84 சென்சார்களை ஐஐடி குழுவினர், பாலத்தின் தன்மை குறித்து அறிய பொருத்தியுள்ளனர். இதில் ஒரு சென்சாரில் இருந்து பெறப்பட்ட கணக்கீடு ஏற்ற இறக்கமாக இருந்ததையடுத்து ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
ஐஐடி குழுவினர் நேரில் ஆய்வுசெய்து அந்த சென்சாரை நீக்கி புதிய சென்சார் பொருத்தினர். இதனையடுத்து பயணிகள் இல்லாமல் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்பொழுது பயணிகளுடன் ரயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது இரு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், 20ஆம் தேதிக்கு பிறகு ரயில்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சொத்துக்களை சட்டவிரோதமாக பதிவுசெய்வதை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்க'