ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 95 டாஸ்மாக் கடைகள் திறப்பு

author img

By

Published : May 7, 2020, 7:04 PM IST

ராமநாதபுரம்: அனைத்து பகுதிகளிலும் உள்ள 95 டாஸ்மாக் கடைகளும் இன்று திறக்கப்பட்டன. அனைத்து கடைகளிலும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி மதுபிரியர்கள் மது வாங்கிச் செல்கின்றனர்.

ராமநாதபுரத்தில் 95 டாஸ்மாக் கடைகள் திறப்பு
ராமநாதபுரத்தில் 95 டாஸ்மாக் கடைகள் திறப்பு

தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விதிமுறைகளைக் கடைப்பிடித்து 95 மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 121 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 26 கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்ததுள்ளது. எஞ்சிய 95 கடைகள் அரசின் விதிமுறையை கடைப்பிடித்து காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சுமார் 296 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மது வாங்க வருபவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளில், ஒருவர் பின் ஒருவர் வரிசையாக நின்று தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து மது வாங்கி செல்கின்றனர்.

காவல் துறையினர் தொடர்ந்து அறிவிப்பு வழங்கியும், கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்து கண்காணித்து வருகின்றனர். ராமநாதபுரம் நகர் பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, ஊருக்கு வெளியே உள்ள கடைகள் மட்டும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவையில் முதல் ஆளாக மது வாங்கி சென்ற ஸ்பெயின் நாட்டவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.