ராமநாதபுரம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, இலங்கை ராணுவம் கடந்த மார்ச் மாதம் 12 மீனவர்களைக் கைது செய்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு முயற்சியால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்து 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய தூதரக அலுவலர்கள் மீனவர்களை கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையம் வந்த 12 மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர்கள் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்குச்செல்ல வாகனம் மூலம் ஏற்பாடு செய்துகொடுத்தனர்.
இதையும் படிங்க: கரண்ட் கட்டான நேரத்தில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை: நபர் கைது