இலங்கையில் வடக்கு பகுதியில் இன்று இலங்கை மீன்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, இந்திய மீனவர் அத்துமீறி இலங்கை எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்து செல்கின்றனர்.
இதனால், தங்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினர். அப்போது அதற்கு பதிலளித்த அமைச்சர் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீன்பிடிப் படகுகளைப் பிடித்துவந்து ஒப்படைக்குமாறும், வருகின்ற பிரச்னைகளைத் தான் கையாள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமராட்சி மீனவர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
மேலும், “இந்திய மீன்பிடிப் படகுகள் இனியும் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் கரையோரத்திற்கு நெருக்கமாக வந்தால், அவற்றைப் பிடித்து வந்து என்னிடம் ஒப்படையுங்கள்.
வருகின்ற பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று பருத்தித்துறையில் பல்வேறு விஷயங்கள் தொடர்பிலான கூட்டம் ஒன்றும் நடைபெற உள்ளது. இது ராமேஸ்வரம், ராமநாதபுரம் மீனவர்கள் மத்தியில பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாகையில் மீன்பிடி வலைக்குள் மீனவர்கள் நூதன போராட்டம்!