ETV Bharat / state

காய் கனிகள் வாங்க... இந்த எண்ணுக்கு அழையுங்கள்!

தளர்வில்லா ஊரடங்கில், நடமாடும் வண்டியில் வரும் காய்கறிகளை பெற, ஊராட்சிகள் வாரியாக பிரத்தியேக தொடர்பு எண்களை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் காய்கறி வண்டி
ராமநாதபுரம் காய்கறி வண்டி
author img

By

Published : May 24, 2021, 7:36 AM IST

ராமநாதபுரம்: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்தல் தொடர்பாக, கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட மொத்த காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை சங்க பிரதிநிதிகள் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்ந்த வட்டார உதவி இயக்குநர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று(மே23) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கூடுதல் ஆட்சியர், “பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே 24 முதல் 31 வரையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த காலகட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஒவ்வொரு குக்கிராமம் வாரியாக, பொதுமக்களுக்கு தேவயைான காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகிப்பதை உறுதி செய்திட வேண்டும். காய்கறி விநியோக வாகனங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அனுமதி சீட்டுகள் வழங்குவார்கள்.

வியாபாரிகள், உழவர் உற்பத்தி குழு, உழவர் ஆர்வலர் குழுக்கள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தொடர்பு எண்களின் விபரங்கள்:

  • மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வட்டாரத்திற்கு 72994 62970
  • போகலூர் மற்றும் நயினார்கோவில் 86676 02994
  • ஆர்.எஸ்.மங்கலம் 96595 84931
  • திருவாடானை 97513 81492
  • கமுதி 94891 66421
  • முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி 94885 40830
  • கடலாடி 75980 27841
  • திருப்புல்லாணி 82202 88448

ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். வாகனங்களில் விற்பனை செய்பவர்கள் அதிகபட்ச காய்கறி வகைகளை வண்டியில் வைத்து கொடுக்கும் படியும் , கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்கறிகளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது வாகனங்கள் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றாலும் பொதுமக்கள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.