ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா, இதர போதை பொருள்கள் விற்பனை ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , அவர்களிடமிருந்து நான்கு கிலோ வரையிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது;
ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா, இதர போதை பொருட்கள் விற்பனை , பதுக்கல் மற்றும் உபயோகித்தல் பற்றி பெயர் அல்லது முகவரி துல்லியமாக தெரிந்தால் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் 9489919722 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் தகவல் தெரிவித்தவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும். மேலும் , தகவல் தெரிவிப்பவரின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோரை எளிதில் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடைக்கை எடுக்க வழிவகுக்கும் என காவல் துறையினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தலைமை காவலரை காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு சன்மானம்!