ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர், லட்சுமி தம்பதி. இவர்களது மகள் ஜனனி (12).
இவர் தனது வீட்டின் அருகே நேற்று (நவ.10) இரவு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஜனனியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து ஜனனி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியை பார்த்தனர். அதில் சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர், அங்கு வந்து சிறுமியின் தங்க செயினை பறித்துச் சென்றது பதிவாகியிருந்தது.
தற்போது சிசிடிவி காட்சி அடைப்படையில் காவல் துறையினர் தங்க செயினை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் பெண்ணிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு