இது தொடர்பாக ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்,
"சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து மத பரப்புரையில் ஈடுபட்ட இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை விமர்சித்த ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மக்களவை சபாநாயகர் ஆகியோருக்கு பாஜக சார்பில் புகார் மனு அனுப்பி இருக்கிறேன்.
![mp-nawaskani](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-1-bjp-urge-action-against-ramanathapuram-mp-visual-script-7204441_25042020142717_2504f_1587805037_419.jpg)
மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட எம்பி நவாஸ்கனி மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று அவர் கூறினார்.