ராமநாதபுரம்: மாவட்டம் முழுவதிலும் நேற்று (அக்.16) சூறைக்காற்று வீசியதில், பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
மேலும் வழக்கத்தைவிட மன்னார் வளைகுடா, லட்சத்தீவு கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை நங்கூரமிட்டு கடலில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். காற்று ஒருபுறமாக வீசுவதால் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் 50 மீட்டருக்கு உள் சென்றுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த நாட்டு படகுகள் அனைத்தும் தரை தட்டி நிற்கின்றன. இதனை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பொன்விழா காணும் அதிமுக.. ஒற்றை தலைமைக்கு மாறுமா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு என்ன?