ETV Bharat / state

பள்ளிகள் திறப்பு குறித்து ராமநாதபுரத்தில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு! - பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு

ராமநாதபுரம்: பள்ளிகள் திறப்பு குறித்து இன்று மாவட்டம் முழுவதும் 10, 12 ஆகிய வகுப்பு பயிலும் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு நடைபெற்றுவருகிறது.

School parent opinion  school reopen parent opinion meet in ramanathapuram  school reopen parent opinion meeting  school reopen parent opinion meeting in ramanathapuram  பள்ளிகள் திறப்பு குறித்து ராமநாதபுரத்தில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு  பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு  பள்ளிகள் திறப்பு
school reopen parent opinion meet in ramanathapuram
author img

By

Published : Jan 7, 2021, 3:35 PM IST

கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பொங்கல் பண்டிகைக்கு பின்னர் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித் துறை முடிவுசெய்துள்ளது. இதனால், 10, 12ஆம் வகுப்பு பாடம் நடத்த பள்ளிகள் திறப்பது குறித்து ஜனவரி 08ஆம் தேதிக்குள் பெற்றோர் கருத்துகளை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும், பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று கருத்துக் கேட்பு நடக்கிறது. அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள 269 பள்ளிகளின் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 17 ஆயிரத்து 719 பேரின் பெற்றோர்களிடமும், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 15 ஆயிரத்து 51 பேர்களின் பெற்றோர்களிடமும் கருத்துக் கேட்பு நடைபெற்றுவருகிறது.

இன்று இதற்கான அறிக்கை அனுப்ப வேண்டும் என்பதால் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளி தலைமையாசிரியர், முதல்வர்கள் மூலம் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பு குறித்து கருத்துக் கேட்பு நடக்கிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு வரும் பெற்றோர்களுக்கு தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டு முகக்கவசம் அணிந்த பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், "கரோனா தொற்று இன்னும் முடிவடையாத நிலையில், உருமாறிய கரோனாவும் பரவுகிறது. இதனால், எங்களது பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப இயலாது.

சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகளில் மாணவ மாணவிகள் மீது கவனம் செலுத்தாததால், பள்ளிகளுக்குச் சென்றால் மட்டுமே நல்ல முறையில் படிக்க இயலும் என்பதால் எங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளோம்.

இதனிடையே, பள்ளிகளில் முறையான தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு, முகக் கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டு ஆசிரியர்கள் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்" எனவும் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.