ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் செய்யது ஜமாலுதீன் மகன் சுகைபு (16), சகுபர் மகன் காமில் (16).
இருவரும் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தனர்.பள்ளி முடிந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் பெரியபட்டினம்-ரெகுநாதபுரம் சாலை வழியாக வீட்டிற்கு சென்றனர்.
அப்போது அரசூர் அருகே எதிரே வந்த வேன் இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த சுகைபு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த காமில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்புல்லாணி காவல் துறையினர், சுகைபு சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழப்பு