ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பெரிய கண்மாய் 511 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட கண்மாயாகும். இதன் மூலம் சாயல்குடி உள்ளிட்ட சுமார் 2000 ஏக்கர் நிலம் பயனடைந்து வருகிறது.
இந்நிலையில் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெரிய கண்மாயிக்கு சொந்தமான 266 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
மேலும் இதனை தனியாருக்கு விற்பனை செய்வதற்காக முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்கு சில அரசு ஊழியர்கள் உதவி செய்வதாகவும் இதனை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்தி விவசாயிகளின் நீர் ஆதாரமாக இருக்கும் பெரிய கண்மாயை மீட்டுத்தரக்கோரியும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சாயல்குடி பெரிய கண்மாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ராமநாதபுரம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
இதையும் படிங்க: நூற்றுக்கணக்கான முட்டையிட்ட ‘ஆலிவ் ரிட்லி’ கடல் ஆமை!