ETV Bharat / state

சாயல்குடியில் நிகழ்ந்த கொலையின் வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 3 நபர்கள் கைது. - மூன்றாண்டுகள்

சாயல்குடியில் நிகழ்ந்த கொலை வழக்கில் மூன்றாண்டுகளுக்குப் பின்னர் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Accused
Accused
author img

By

Published : Jul 31, 2021, 4:54 PM IST

இராமநாதபுரம்: சாயல்குடி அருகே இடத்தகராறில் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர் அருகே கடந்த 2018 ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து சாயல்குடி வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், சாயல்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், சாயல்குடி காவல் நிலைய சரகம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை மகன் முத்து என்பவர் காணாமல் போனதாக, அவரது அண்ணன் அழகுலிங்கம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஏற்கனவே விசாரணை நடத்திவந்தனர்.

இந்த இரு வழக்குகளையும் விசாரணை செய்ததில், காணாமல்போன முத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. முத்துவை கொலை செய்த குற்றவாளிகள் யார் என்று தெரியாமல் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்திவந்தனர்.

கீழக்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திருமலை மேற்பார்வையில், சிக்கல் காவல் ஆய்வாளர் முருகதாசன், சார்பு ஆய்வாளர் சரவணன், தலைமைக்காவலர் தங்கச்சாமி, தீவிர குற்றத்தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து, மூன்று மாதங்களில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட முத்து தன்னுடைய குடும்பச் சொத்தில் பாகமாக கிடைத்த 20 சென்ட் சொத்தினை, அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்ற குணம் என்பவருக்கு விற்பதாக ஒப்பந்தம் செய்து ரூ.50 ஆயிரம் முன்பணமாகப் பெற்றுக் கொண்டார்.

ஆனால் முத்து இடத்தைப் பத்திரப் பதிவு செய்யாமல் இருந்ததுடன் பணத்தையும் திரும்ப வழங்காமல் இருந்துள்ளார்.

பணத்தைத் திருப்பித் தர குணசேகரன் கேட்டபோது, பொது இடத்தில் முத்து குணசேகரன் என்ற குணத்தைத் தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்த குணம், தனது உறவினர்களான வேதமாணிக்கம்,பால் பவுன்ராஜ், ஜோசப்ராஜன் ஆகியோருடன் சேர்ந்து முத்துவை காரில் கடத்தி சென்று, மது குடிக்க வைத்து இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்துள்ளனர்.

தொடர்ந்து முத்துவின் உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

கொலையில் தொடர்புடைய குணசேகரன் நோயால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தலைமறைவான குற்றவாளிகள் வேதமாணிக்கம், பால் பவுன்ராஜ் மற்றும் ஜோசப் ராஜன் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டினார்.

இதையும் படிக்கலாமே:தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் கையாடல்: செயலாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.