தேர்தல் வரவிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பல சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் சிற்பம் அமைத்து தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேர்தலின்போது, வாக்காளர்களின் முக்கியத்துவவாசகங்கள் அடங்கிய மணல் சிற்பத்தை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் திறந்து வைத்தார். இந்த மணல் சிற்பத்தில், தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் விழப்புணர்வை ஏற்படுத்தும் விதமான வாசகங்கள் பயன்படுத்துப்பட்டுள்ளன.
மேலும், '100% நேர்மையாக வாக்களிப்பது', 'வாக்கு விற்பனைக்கு அல்ல' ஆகிய வாசகங்களும் இந்த மணல் சிற்பத்தில் இடம்பெற்றுள்ளன.