ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியில் மஞ்சள், கஞ்சா, கடல் அட்டை உள்ளிட்டவை இலங்கைக்கு தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகிறது. இதனால் கியூ பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனுஷ்கோடி கடற்பகுதியில் இன்று (ஜன.12) ரோந்தில் ஈடுபட்டபோது ஒரு முட்டையில் மிதந்து வந்த கஞ்சாவை காவல் துறையினர் கைப்பற்றினர்.
அந்த மூட்டையில் 25 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என தெரிகிறது. இதனை கடத்தல்காரர்கள் விட்டுச் சென்றிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 160 கிலோ புகையிலை பறிமுதல்; கஞ்சா விற்றதாக ஒருவர் கைது