ETV Bharat / state

லஞ்சம் கேட்ட இளநிலை வருவாய் அலுவலர் கைது! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: உழவர் இயற்கை மரண உதவி தொகை விண்ணப்பித்தவரிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட இளநிலை வருவாய் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் தடுப்பு
ஊழல் தடுப்பு
author img

By

Published : Aug 4, 2020, 8:35 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டிணம் அருகே உள்ள பூத்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேது. இவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து, மனைவி ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் இளநிலை வருவாய் அலுவலர் ஈஸ்வரனிடம் 20 ஆயிரம் உதவித் தொகைக்காக விண்ணப்பம் செய்துள்ளார்.

தொடர்ந்து வந்து செல்ல இயலாததால் உறவினர் தனசேகரன் என்பவரிடம் பெற்றுவரக் கூறியுள்ளார். வட்டாட்சியர் அலுவலகம் சென்று ஈஸ்வரனிடம் கேட்ட போது, அவர் பதிவு செய்ய 2 ஆயிரம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து, சேதுவின் மனைவி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றப்புலனாய்வு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

தொடர்ந்து இன்று(ஆக.4) லஞ்ச ஒழிப்பு துறையினர், ரசாயனப் பவுடர் தடவிக் கொடுத்த 2 ஆயிரம் ரூபாயை, ஈஸ்வர் வாங்கியபோது பீட்டர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.