ETV Bharat / state

ராமநாத சுவாமி கோயில் தீர்த்த கிணறுகளை திறக்க கோரிக்கை

ராமநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தக் கிணறுகளை திறக்க கோயில் இணை ஆணையரிடம் தீவு மக்கள் நலன் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதசுவாமி கோயில் தீர்த்தக் கிணறுகளை திறக்க கோரிக்கை

author img

By

Published : Jul 25, 2021, 4:03 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வருகின்ற வெளியூர் பக்தர்களின் பிரதான நோக்கம் அங்கு உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடுவது.

கரோனா பெருந்தொற்று காரணமாக அரசு உத்தரவுப்படி கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளும் மூடப்பட்டு இன்றுவரை திறக்கப்படவில்லை.

தொழிலாளர்கள் பாதிப்பு

இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. சுற்றுலா மூலம் வருமானம் ஈட்டும் விடுதி உரிமையாளர்கள், வாடகை கார் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் என அனைவரும் வருமானமின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

தரிசனத்திற்கு மட்டும் அனுமதி

கோயில் தரிசனத்திற்காக திறக்கப்பட்டாலும் புனித தீர்த்தங்களில் நீராட அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தீவு பொதுமக்கள் நலன் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக சுற்றுலாவை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தீர்த்த கிணறுகளைத் திறக்க வேண்டும் என கோயில் ஆணையரிடம் நேற்று (ஜூலை 24) கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் புதிய மீன்வள மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.