தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேசிய கொடியேற்றப்பட்டு 72ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். மேலும் 149 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.
ராமநாதபுரம்
நாட்டின் 72ஆம் குடியரசு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தென்காசி
தென்காசியில் 72ஆவது குடியரசு தின விழாவையொட்டி தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
கன்னியாகுமரி
நாடு முழுவதும் இன்று 72ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் எம். அரவிந்த் தேசிய கொடியேற்றினார். பின்னர் அம்மாவட்ட காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தேனி
இந்தாண்டு குடியரசு தின விழா, கரோனா தொற்று பரவலால் கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 76 நபர்களுக்கு முதலமைச்சரின் தங்கப் பதக்கம், பாராட்டு சான்றிதழ் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
கரோனா நோய்த் தொற்றால் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதால் இந்தாண்டு குடியரசு தின விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தேசியக்கொடி ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.