ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பெருவாய்க்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சாரதா(55) மட்டும் கிராமத்து வீட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில், அவர் மதுரையில் தனது மகளை பார்ப்பதற்காக சென்றார்.
அந்த சமயத்தில் நள்ளிரவில் அவரது வீட்டிலிருந்து மூன்று பேர் ஓடியதை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் பார்த்து அருகில் இருப்பவர்களிடம் கூறினார். அதனையடுத்து அங்கு வந்த சிலர் சாரதா வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, கதவின் கம்பிகளை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்ளே சென்றது தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின்படி நேற்று காலை மதுரையிலிருந்து வந்த சாரதா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 70 பவுன் நகைகள், 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சாரதா அளித்த புகாரின் பேரில், திருவாடானை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வைகை ஆற்றில் அடித்துச்சென்ற இளைஞர் - வைரலான வீடியோ