ETV Bharat / state

ராமநாதசுவாமி கோயிலில் தரிசன கட்டணம் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் - ramanatha swamy temble

ராமநாதபுரம்: ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இராமநாதசுவாமி கோவில் தரிசன கட்டணம் உயர்வு!
author img

By

Published : Aug 11, 2019, 5:50 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்புமின்றி தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், சன்னதியின் அருகே உள்ள தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டரை இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் 50 ரூபாயாக இருந்த சிறப்பு தரிசனச் சீட்டு 100 ரூபாயாகவும், விரைவு தரிசனச் சீட்டு 200 ரூபாயாகவும், அம்பாள் தரிசனச் சீட்டு 50 ரூபாயாகவும், 1500 ரூபாயில் செய்து வந்த ரூந்தரபிஷேகம் 3000 ரூபாயாகவும், 1000 ரூபாயில் செய்து வந்த பஞ்சாமிர்த அபிஷேகம், சங்காபிஷேகம், கலசாபிஷேகம் 3000 ரூபாயாகவும் வெள்ளி ரத புறப்பாடு, பஞ்சமூர்த்தி புறப்பாடு தரிசனம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும் கோயில் நிர்வாகத்தால் உயர்த்தப்பட்டு ஆங்காங்கு சிறு காகிதங்களில் விலை பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.

இராமநாதசுவாமி கோவில் தரிசன கட்டணம் உயர்வு!

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இந்து மக்கள் கட்சியினரிடமும், கோயில் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, 'கட்டணத்தை உயர்த்தக்கோரி ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளதால் உயர்த்தப்பட்டுள்ளது' என்று கோயில் நிர்வாகிகளும் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக, இந்து மக்கள் கட்சியினரும் காவல்துறையினரிடம் வாக்குவாதம் நடத்தினர்.

Intro:இராமநாதபுரம்
ஆக 11.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் கோவிலுக்குள் முற்றுகையிட்டதால் பரபரப்புBody:ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு தரிசன டிக்கெட் 50 ரூபாய்க்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது இன்று முதல் 100 ரூபாயாகவும், விரைவு தரிசனத்திற்கு 200 ரூபாயாகவும் அம்பாள் தரிசனத்திற்கு 50 ரூபாயாக கோயில் நிர்வாகத்தால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலும் ரூந்தரபிஷேகம் செய்ய 1500 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகவும். பஞ்சாமிர்த அபிஷேகம், சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்ய ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி உள்ளனர்.
இதுபோல் வெள்ளி ரத புறப்பட்டிருக்கும் பஞ்சமூர்த்தி புறப்பாடு இருக்கும் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி சிறு பேப்பர்களில் ஒட்டப்பட்டுள்ளது.

ஆனால் கோவிலில் பல பகுதிகளில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு 50 ரூபாய் என போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதால் சிறப்பு தரிசன டிக்கெட் பெற வந்த பக்தர்கள் தரிசன டிக்கெட் கொடுக்கும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சன்னதியின் அருகே உள்ள தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டரை இந்து மக்கள் கட்சியினர் எவ்வித அறிவிப்பும் இன்றி தரிசன டிக்கெட் உயர்த்தப்பட்டதை கண்டித்து டிக்கெட் கவுன்டர்கள் முற்றுகையிட்டு தரிசன டிக்கெட் பெற வரும் பக்தர்களிடம் டிக்கெட் வாங்க வேண்டாம் என கூறினர். மேலும் தரிசன டிக்கெட் பெறாமல் தரிசனம் செய்யுங்கள் என தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து வாக்குவாதம் முற்றியது அடுத்து டிக்கெட் கவுண்டரில் உள்ள ஊழியர் டிக்கெட் கவுண்டர் அடைத்து விட்டு சென்றுவிட்டார்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் இந்து மக்கள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் கோவில் அதிகாரிகளை அழைத்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கோவில் ஊழியர்கள் அதற்கான விளக்கத்தை தெரிவித்ததையடுத்து இந்து மக்கள் கட்சியினர் டிக்கெட் விலையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துச் சென்றனர்.

இது குறித்து கோவில் ஊழியரிடம் கேட்ட போது கட்டணத்தை உயர்த்தக் கோரி ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது. கட்டண உயர்வுக்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளதையடுத்து உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.