தென் இந்தியாவின் காசியாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருதப்படுகிறது. இங்கு, புனித பயணம் சென்று கோயிலின் 22 தீர்த்தங்கள், அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி ராமநாதசுவாமியையும், ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசித்தால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
மேலும், ராமநாதசுவாமி கோயிலில் மாசி மாதத்தில் மகா சிவராத்திரியும், ஆடி மாதத்தில் திருக்கல்யாணமும், தைப்பூசத்தில் லட்சுமண தீர்த்தத்தில் தெப்ப திருவிழாவும் முக்கியமான திருவிழாக்கள் ஆகும். இந்த ஆண்டிற்கான சிவராத்திரி திருவிழா மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையடுத்து, இன்று (மார்ச்4) காலை 9 மணிக்கு மேல் கோயில் கொடிமரத்தில் குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க திருவிழா கொடிஏற்றதுடன் தொடங்கியது, அதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன.
இதில், இணை ஆணையர், கோயில் அலுவலர்கள் உள்பட ஏராளமானார் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 11 ஆம் தேதி மஹா சிவராத்திரியும், 12 ஆம் தேதி தேரோட்டமும், 13 ஆம் தேதி அம்மாவாசை தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 11 மாதங்களுக்குப் பின் ராமநாதசுவாமி கோயிலில் நீராட அனுமதி