ETV Bharat / state

ராமேஸ்வரம் ரயில் நிலையம் ரூ.120 கோடி செலவில் மறுசீரமைப்பு - Rameswaram railway station

ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையம் 120 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

ராமேஸ்வரம் ரயில் நிலையம்
ராமேஸ்வரம் ரயில் நிலையம்
author img

By

Published : May 26, 2022, 6:47 AM IST

மதுரை: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் நெரிசலை தவிர்க்க தற்போது உள்ள ரயில் நிலைய கட்டடம் 120 கோடி ரூபாய் செலவில் புதியதாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. புதிய ரயில் நிலையக் கட்டடம் இரண்டு மாடிகள் கொண்டதாக அமைய உள்ளன. பிற்காலத்தில் ஆறு மாடிகள் கட்டும் அளவிற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட உள்ளது.

இரண்டாவது மாடிக்கு மேலே திறந்தவெளி உணவகங்கள் அமைய இருக்கின்றன. பயணிகள் ரயில் நிலையத்திற்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும் மேற்கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான தூண்கள் ராமேஸ்வரம் கோயிலின் பிரபலமான தூண்கள் போல அமைய உள்ளன. ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியிலும் நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் வர இருக்கிறது. நடைமேடைகள் எண் 3, 4 மற்றும் 5 ஆகியவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட இருக்கிறது.

ராமேஸ்வரம் ரயில் நிலையம்
ராமேஸ்வரம் ரயில் நிலையம்

அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைய உள்ளது. பார்சல் அலுவலகம் மற்றும் ரயில்வே சேவை அலுவலகங்கள் ஆகியவையும் மேம்படுத்தப்பட உள்ளது. தங்கும் அறைகள், ஓய்வறைகள், கழிப்பறைகள் ஆகியவையும் நவீன வசதிகளுடன் அமைய இருக்கிறது. இந்தப் பணிகள் நிறைவடைய 18 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாடலில் இடம்பெற்று சர்ச்சையான ’ஒன்றியம்’ வார்த்தை குறித்து விளக்கமளித்த கமல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.