ராமநாதபுரம்: ஒன்றிய அரசு வருகிற மழைக்காலக் கூட்டத்தொடரில் மீனவர்களுக்கு எதிரான மசோதாவை கொண்டுவர போவதாக தகவல் வெளியுள்ளது. அந்த மசோதாவில் மீனவர்கள் கட்டணம் கட்டித்தான் மீன்பிடிக்க செல்ல வேண்டும், மத்திய அரசு வழங்கக்கூடிய வலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
எல்லைதாண்டி அந்நிய நாட்டின் கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், ஒரு வருடம் சிறை உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற போவதாகத் தெரிகிறது. இது மீனவர்களுக்கு எதிராக உள்ளது. இந்த மசோதா கொண்டு வரக்கூடாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டம் அறிவிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (ஜூலை 18) நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வர உள்ள இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 19) ஒரு நாள் கப்பலில் கறுப்புக் கொடி கட்டி கடலில் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து