ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 1200க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்வளத்துறையிடம் அனுமதி பெற்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குள் சென்றனர்.
இவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பீட்டர், ராமு, ராஜு, கோஸ்டன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அங்கிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வருகின்ற மார்ச் 6, 7ஆம் தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவ கிராமங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த மத்திய அரசின் சர்ச்சை கருத்து: தடையை மீறி ஆர்ப்பாட்டம்