ETV Bharat / state

ராமேஸ்வரம்-புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!

author img

By

Published : Mar 16, 2021, 9:25 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம்-புவனேஸ்வர் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் ஜூன் மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்-புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில்

ராமேஸ்வரம்-புவனேஸ்வர் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் மார்ச் மாத இறுதிவரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில்களின் சேவை தற்போது ஜூன் மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வண்டி எண் 08495 ராமேஸ்வரம்-புவனேஸ்வர் வாராந்திர விரைவு ரயில் ஏப்ரல் 4, 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய நாள்களில் ராமேஸ்வரத்திலிருந்து காலை 8.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 6.10 மணிக்கு புவனேஸ்வர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 08496 புவனேஸ்வர்-ராமேஸ்வரம் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் ஏப்ரல் 2, 9, 16, 23, 30 மற்றும் மே 7, 14, 21, 28 மற்றும் ஜூன் 4, 11, 18, 25 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் புவனேஸ்வரிலிருந்து மதியம் 12.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமேஸ்வரம் வந்துசேரும்.

இந்த ரயில்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, துவ்வாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம், பெர்ஹாம்பூர், குர்தா ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்றுவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.