ETV Bharat / state

புதிய மீன்பிடி சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: கடலில் இறங்கிப் போராடிய மீனவர்கள் - rameshwaram news

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ramanthapuram
புதிய மீன்பிடி சட்ட மசோதா
author img

By

Published : Jul 19, 2021, 4:46 PM IST

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் புதிய மீன்பிடி சட்ட மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல்செய்யவுள்ளது. எல்லை வரையறுப்பது, எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிப்பது, மீன்பிடிக்கச் செல்லும்போது அனுமதிச்சீட்டு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த இந்த மசோதாவுக்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் கறுப்புக் கொடி கட்டி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் இறங்கிப் போராட்டம்

மேலும், ராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணியாக மீன்பிடித் துறைமுகம் வந்தது மட்டுமின்றி கடலில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

அப்போது, தொடர்ந்து ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் இணக்கம்காட்டி மீனவர்களைக் கண்டுகொள்வதில்லை என்றும், மீனவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது எனவும் கண்டன முழக்கங்களை இட்டுவருகின்றனர்.

புதிய மீன்பிடி சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு

இந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

இதன் காரணமாக, நேரடியாக ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும், சார்பு தொழிலாக ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் பாதிப்படைந்துள்ளனர், இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மேகதாது அணைக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.