ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பா நகரைச் சேர்ந்தவர் ராஜாத்தி. இவரது கணவர் கடந்தாண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவரது இரண்டு மகன்களில் ஒருவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். மற்றொரு மகனுடன் இவர் வசித்து வந்தார்.
அதிர்ச்சியடைந்த மகன்
இன்று (ஏப். 24) அவர் வீட்டில் இருந்தபோது, வீட்டின் பின்புறமாக நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ராஜாத்தியை கம்பியால் தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றுள்ளார்.
அவரின் மகன் மதிய உணவு சாப்பிட வந்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை கண்டு அதிர்ச்சி அடைந்து, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பின்னர், காவல் துறைக்கு தகவலளித்துள்ளார். தகவலின் பேரில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.