ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரின் மகன் கருப்பையா (45). இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
அங்கு வேலை பார்த்த இடத்தில் முதலாளி சரியாக சம்பளம் வழங்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து கருப்பையா அங்கிருந்து விலகி வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
தற்போது கரோனா தொற்று பாதிப்பால் கருப்பையா வாழ்வாதாரம் இழந்து அன்றாட உணவிற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும், ஊர் திரும்ப வேண்டுமானால் முதலாளியின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
ஆனால் ஒப்புதல் வழங்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே மகனை மீட்டு இந்திய கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று(ஜூலை 20) தாய் பஞ்சவர்ணம் குடும்பத்தினருடன் வந்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவிடம் மனு அளித்தார்.
இதையும் படிங்க: சீமானை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!