ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வேளையும் உணவு மருத்துவமனையிலிருந்து வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மரண வாக்குமூலம் என்ற தலைப்பில் ஒரு கடிதம் சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. அதில், நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட தனது தாய், தந்தை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும், இங்கு முறையாக உணவு வழங்கப்படாததால் அவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்
இதனையடுத்து ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்து. கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, உணவு ஏற்பாடு, ஆக்ஸிஜன் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில், மருத்துவக் கல்லூரி டீன் அல்லி, காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார் என பலரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!