சாயல்குடி சுயம்புலிங்க நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சோனைமுத்து (20) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சோனைமுத்து(20). இவர் சாயல்குடியில் தங்கி, கட்டட தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இந்நிலையில் சாயல்குடி சுயம்புலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி தனது சொந்த ஊரான காரியாபட்டி அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் தாயார் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான காவலர்கள் காரியாபட்டி விரைந்து சோனைமுத்துவை கைது செய்தனர். பின் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னை மாதவரத்தில் இருந்து லாரி திருடிச் சென்ற இளைஞர் மரக்காணத்தில் கைது!