ETV Bharat / state

கருவேல மரங்களை அகற்றி மைதானமாக மாற்றியமைத்த தலைமை காவலர்! - ரமநாதபுரம் செய்திகள்

ராமநாதபுரம்: கருவேல மரங்களை அகற்றி, சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானமாக மாற்றியமைத்துள்ளார் தலைமை காவலர் ஒருவர்.

ரமநாதபுரம் செய்திகள்
கருவேல மரங்களை அகற்றி மைதானமாக மாற்றியமைத்த தலைமை காவலர்
author img

By

Published : Mar 8, 2021, 7:46 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சுபாஷ் சீனிவாசன். இவர் பல வீரதீர செயல்கள் செய்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சரிடம் விருது பெற்றவர். இவர் மரக்கன்று நடுவதும், மாவட்டத்திலுள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றி மரத்தை பாதுகாப்பதும், ஏரி, குளம் மற்றும் கண்மாய்களை தூர்வாரி, அதன் கரையோரங்களில் சிறுவர்களைக் கொண்டு பனை விதை நடுவதும், அரசமரம் உள்ளிட்ட மரக் கன்றுகளை நடுவதும் போன்ற சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கருவேல மரங்களை அகற்றி மைதானமாக மாற்றியமைத்த தலைமை காவலர்

தற்போது அவர் வசித்து வரும் சேதுபதி நகர் பகுதியில், 2 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தினை, கருவேல மரம் ஆக்கிரமித்திருந்தது. அதனை டிராக்டர்கள் மூலம் அகற்றி, அவ்விடத்தை சிறுவர்கள் விளையாடுவதற்கான மைதானம் போல் மாற்றியுள்ளார்.

இதில், அந்தப் பகுதியிலுள்ள சிறுவர்கள் அனைவரும், சைக்கிள்கள் ஓட்டுவதற்கும், ஓடிப்பிடித்தல், கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகளையும் விளையாடி வருகின்றனர். கருவேல மரங்களை அகற்றி சிறுவர்கள் விளையாடும் வகையில் மாற்றி அமைத்ததற்காக, அப்பகுதி மக்கள் தலைமை காவலர் சுபாஷ் சீனிவாசனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: மகளிர் தினம்: கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப்பெண்களின் நம்பிக்கை கதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.