இராமநாதபுரம்,
மார்ச் 12-
இராமநாதபுரம் லோக் சபா தொகுதியில் 15, 53,761 வாக்காளர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் லோக்சபா தொகுதியில் 15, 52,761 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வீரராகவ ராவ் கூறினார். லோக்சபா பொதுத் தேர்தல்-2019 தொடர்பான இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பையடுத்து
தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் மாதிரி நன்னடத்தை
விதிகள் குறித்து
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீர ராகவ ராவ் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4
சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் சுருக்கத் திருத்தம்-2019 அடிப்படையில் இறுதி வாக்காளர்
பட்டியல் ஜன.31 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் 784 இடங்களில் 5,60,173 ஆண் வாக்காளர்கள் 5,62,347 பெண் வாத்காளர்கர், 69 மூன்றாம்
பாலினத்தைவர் என 11,22,589 வாக்காளர்களாக உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 9,226 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்காளர் பட்டியலில் தனி குறியீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 2 ,19,390
வாக்காளர்கள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில்
2,10,728 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி
ராமநாதபுரம் லோக் சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில்
ஜன.31 ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி 1,916
வாக்குச்சாவடி மையங்கள் 7,73,036 ஆண் வாக்காளர்கள், 7,79,643 பெண் வாக்காளர்கள்,
மூன்றாம் பாலினத்தவர் 82 பேர் என 15,52,761 வாக்காளர்கள் உள்ளனர்.
லோக் சபா பொதுத் தேர்தல்-2019-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில்
வெளியிடப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்தவரை வாக்குப்பதிவு
இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை
இயந்திரம் வரப்பெற்று ராமநாதபுரம் வேளாண்ம ஒழுங்குமுறை
விற்பனைக்கூட கிட்டங்கியில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரம் (நுஏஆ) (டீரு-3310ää ஊரு-1800)
மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் (விவி பேடு1800) இருப்பில்
வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக
ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் (நுஏஆ) (டீரு-300ää ஊரு-30) மற்றும் வாக்காளர்
சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரம் (ஏஏPயுவு-600) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்
அலுவலக கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டுää அனைத்தும் 09.03.2019 முதல் முதனிலை சரிபார்த்தல்
(குகைளவ டுநஎநட ஊhநஉமiபெ) நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2019-ல் பயன்படுத்தவுள்ள ஏஏPயுவு குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்துவதற்காகää அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 09.02.2019 முதல் 13.02.2019 வரை ஏஏPயுவு குறித்து
விழிப்புணர்வு முகாம்களுக்காக இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை
விற்பனைக்கூடத்திலிருந்து டீரு-90ää ஊரு-90ää ஏஏPயுவு-90 ஆகியவை எடுக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பு
விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்காக நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 28 குழுக்களுக்கு வழங்கப்படுள்ளது.
இராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. லோக் சபா தேர்தல் பணிக்கு சட்டமன்ற தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படை வீதம்
12 குழுக்கள், சட்டமன்ற தொகுதிக்குள் தலா ஒன்று
வீதம் அமைக்கப்பட்டுள்ளது. லோக் சபா தேர்தலுக்காக 17 நியமனம்
செய்யப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய
தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன்
ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது .
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி முன்னிலை வகித்தனர்.