இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் "ராமநாதபுரம் திணைக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் திலீபன், சிவா, ரஞ்சித், முத்துக்குமார், ரவிக்குமார், முனீஸ்வரன் ஆகிய ஆறு மீனவர்களும் வறுமை காரணமாக கடந்தாண்டு மீன்பிடித் தொழிலுக்காக துபாய்க்குச் சென்றனர்.
அங்கு சென்ற அவர்களிடமிருந்து ஊரடங்கிற்குப் பின் மூன்று மாதங்களாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. பணிக்கு அமர்த்தியவர்களிடம் தொடர்புகொண்டால் சரியாகப் பதில் அளிக்கவில்லை. ஆகவே, அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் மீட்பு!