தமிழ்நாட்டில் இன்று 27 மாவட்டங்களுக்கான முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் 144ஆவது வார்டில் வாக்காளர்களை குழப்பமடையச் செய்யும் நிகழ்வு நடந்துள்ளது. இந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை ஒட்டாமல் இருந்த அலுவலர்கள் தாமதப்படுத்தியுள்ளனர்.
இதனால் வேட்பாளர்களின் சின்னங்களை அறிய முடியாமல் வாக்காளர்கள் திணறினர். இதையடுத்து அலுவலர்கள் அவசர அவசரமாக சின்னங்களை ஒட்டி வாக்காளர்களை வாக்களிக்க அழைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி தொடக்கம்!