ராமநாதபுரம் அரண்மனை, கேணிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தேவையின்றி வெளியில் சுற்றுவோர் குறித்த இன்று (ஜூன்.04) அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது, வாகனங்களை நிறுத்தி விசாரணை செய்யும்போது தேவையின்றி வெளியே வந்தவர்களுக்கு அவர் அபராதம் விதித்தார்.
பின்னர், ஆய்வை முடித்துவிட்டு அங்கிருந்து செல்லும்போது சாலையின் ஓரத்தில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் அமர்ந்து இருந்ததைக் கண்டனர். உடனே, மாவட்ட ஆட்சியர் வாகனத்திலிருந்து இறங்கி மூதாட்டியை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஆட்டோ மூலம் ஏற்றி அனுப்பி வைத்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்