ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 839 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், ஒரே நாளில் 12 காவலர்கள், இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர், டாக்டர்கள் உள்பட 107 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 235 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஏற்கனவே மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர்ந்து வரும் நோய்த்தொற்றின் எண்ணிக்கையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் ரத்தம் வழிந்த நிலையில் யானை உயிரிழப்பு: துப்பாக்கியால் சுட்டுக் கொலையா?